உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள காந்தி பூங்காவில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலைக்கு ஒரு கும்பல் அவமரியாதை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈத் பண்டிகை கொண்டாட்டத்திற்காகப் பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட 8 முதல் 10 பேர் கொண்ட இளைஞர் கும்பல், காந்தி சிலையின் மீது ஏறி அநாகரீகமான முறையில் சைகை செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதை அடுத்து, உள்ளூர் மக்கள் போராட்டங்களில் இறங்கினர். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
View this post on Instagram
வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், தேசத் தலைவரை அவமதித்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
ஒரு நாட்டின் பெருமைக்குரிய தலைவரின் சிலைக்கு, வெறும் சமூக வலைதளப் புகழுக்காக இப்படி ஒரு இழிவான செயலைச் செய்திருப்பது நாகரீக சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
