ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று காரியங்களை யோசித்து செய்வது நல்லது. மன சஞ்சலங்கள் மாறும் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணிசுமை அதிகரிக்கும். வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. நேர்மையை பாராட்டி பொறுப்புகள் தேடி வரும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். கூடுதல் உழைப்பு தேவை. பெண்கள் இன்று நிதி நெருக்கடிகளை சமாளித்து விடுவீர்கள். வீண் பேச்சை தவிர்த்திடுங்கள். காரியங்கள் அற்புதமாக நடக்கும். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்கிறீர்கள்.

இன்று மாணவர்கள் சிந்தனையில் சில மாற்றங்கள் ஏற்படும். தேர்வில் வெற்றி பெற முழு முயற்சி வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்: 2, 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்