மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் வழக்கத்திற்கு மாறாக சில பணிகள் தொந்தரவு ஏற்படுத்தும். இன்று அனைவரிடமும் பட்டும் படாமல் பேசுவது நல்லது. குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். குடும்பத்தினர் தேவையான உதவிகளை செய்வார்கள். சுற்றுலா செல்ல திட்டம் போடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது.

அக்கம் பக்கத்தினருக்கு நகைகளை கடனாக கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பணியில் இருந்து வந்த பிரச்சனை தீரும். பண வரவு திருப்தியைக் கொடுக்கும். தொழில் தொடர்பான அலைச்சல் ஏற்படும். பெண்கள் சேமித்த பணம் செலவுக்கு பயன்படும். பொறுமை காப்பது அவசியம். பணி சுமை அதிகரிக்கும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையை நகர்த்தி செல்ல முடியும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்