தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர்‌ பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் ராம்சரண் 10 வருடங்களுக்கு பிறகு தந்தையாக போகும் மகிழ்ச்சி தகவலையும் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இதனை அடுத்து ராம் சரணின் மகளுக்கு ‘கிளிங்கரா கொனிடேலா’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், சின்னத்திரை நடிகர் அல்லு அர்ஜுன் தனது மருமகளுக்கு தங்கத் தொட்டிலை பரிசாக வழங்கினார். கிளிங்கராவின் பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிக்கும் வகையில் தங்க தொட்டில் எழுத்துக்களில் சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.