ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி காதலை மறுத்ததால் கத்திக் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாகக் கூறப்படும் முனியராஜின் புகைப்படம் தற்போது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட முனியராஜ் மீது, ஏற்கனவே சிறுசிறு சண்டைகள் தொடர்பான புகார்கள் தவிர, வேறு பெரிய வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட முனியராஜின் புகைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில், கொலையாளியின் மீது தொடர்ச்சியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயிரிழந்த மாணவி ஷாலினியின் உறவினர்கள் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைதியாக இருந்த பகுதியில் பள்ளி மாணவி காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட இச்சம்பவம், அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
