ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் அஜ்மீருக்கு வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது புதிய பாம்பன் பாலம் வேலைகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் சேவை மானாமதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணிகளின் வசதிக்காக பஞ்சாபில் உள்ள பெரோஸ்பூர் கண்டோன்மென்ட் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் வியாழக்கிழமை இரவு 10.45 மணிக்கு அஜ்மீர் சென்று பிறகு இரவு 10.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு பெரோஸ்பூர் கண்டோன்மென்ட் சென்றடையும். இந்த ரயில் மறு மார்க்கமாக அக்டோபர் ஏழாம் தேதி சனிக்கிழமைகளில் பெரோஸ்பூர் கண்ட்ரோல்மெண்டில் இருந்து அதிகாலை 5.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு அஜ்மீர் வந்து சேரும் எனவும் பிறகு அங்கிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்ட திங்கட்கிழமை இரவு 8.15 மணிக்கு மானாமதுரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.