புதிய மருத்துவக் கல்லூரி தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை  திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த கடிதத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த அவசர கடிதத்தினை எழுதி இருக்கின்றார்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த அறிக்கையின் காரணமாக  தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும்,  தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அதே போல மருத்துவத்துறையில் இருக்கக்கூடிய வல்லுனர்களும் அந்த அபாயத்தினை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையிலே அதனை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி இருக்கின்றார்.

அந்த கடிதத்திலே பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக மாநில அரசிடம் உரிய ஆலோசனை மேற்கொள்ள தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசிலிருந்து வெளியிடப்பட்ட அந்த அறிவிக்கையின் மூலமாக தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முடியாத ஒரு சூழ்நிலையானது ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே அதிகமாக மருத்துவ கல்லூரிகளைக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே இதுபோன்ற அசாதாரணமாக சூழலை உருவாக்க கூடாது,  மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு இன்னும் அவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை தான் முன்னெடுக்க வேண்டும். இது போன்ற புதிய நடவடிக்கைகள் என்பது அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய வகையில்  புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவர முடியாதபடி இருக்கக்கூடிய நிலையிலே, பேராபத்தை உண்டாக்கும் என்று தமிழக முதலமைச்சர் ம. க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு  கடிதம் எழுதி இருக்கின்றார்.