தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். இத்தகைய கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் புதிய மருத்துவமனைகளிலும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.  தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ள தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் சொல்லியுள்ளார்.

இது அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு நிச்சயமாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழ்நாடு தான் இந்திய அளவில் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ள ஒரு மாநிலமாக இருக்கின்றது. இன்னமும் ஒரு சில மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் இல்லாமல் இருக்கிறது.  அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வரக்கூடிய நிலையில் இது போன்ற ஒரு புதிய முயற்சியால் தமிழகத்திற்கு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக தொடங்க முடியாமல் ஒரு சூழல் ஏற்படும். எனவே இதை சுட்டிக்காட்டி இந்திய பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார்.