தமிழகத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய உத்தரவுகளை வெளியிட்டார்.

அதாவது கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழகத்தில் அதிகமாக குற்ற சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் சில ஊடகங்களில் இது போன்ற செய்திகள் சித்தரிக்கப்படுவதால் மக்களிடையே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த தவறான கருத்து ஏற்படக்கூடும். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.