இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சைபர் தாக்குதலால் அதிகம் குறிவைக்கப்பட்ட டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் ஆய்வில் பல பயனர்கள் எளிதாக ஹேக் செய்யப்படும் பாஸ்வேர்டுகளை வைத்துள்ளனர். பெரும்பாலும் GGGGGGG, CLEOPATRA, 00000000 போன்ற எட்டு எழுத்துக்கள் கொண்ட சொல்லை அதிகம் வைத்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களது பாஸ்வேர்டை யாருக்கும் தெரியாமல் கடினமாக மாற்றங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.