ராணிப்பேட்டை மாவட்டம், ஆக்ராவரம் அடுத்த மலைமேடு பகுதியில் செல்லம்மாள் (70) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார்.
நேற்று (நவ. 25) நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்த கொள்ளையர்கள், மூதாட்டியின் காதில் இருந்த தங்கக் கம்மலைக் கழற்ற முயன்றுள்ளனர். மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்ததால், கொடூரச் செயலில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அவரது இரண்டு காதுகளையும் அறுத்துவிட்டு தங்கக் கம்மலைத் திருடிச் சென்றுள்ளனர்.
கொடூரமான இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி செல்லம்மாள், உடனடியாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்தச் செயலில் ஈடுபட்ட கொடூரக் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
