குடியரசு தினத்தை முன்னிட்டு கட்ச தீவில் காவி புலிப்படை கட்சி சார்பாக தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சிலையிடம் மனு கொடுத்துவிட்டு ராமேஸ்வரம் புறப்படுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் காவிரி புலிப்படை கட்சி  தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆனந்த், பிரபா, முருகன், தினேஷ், பிரபாகரன் போன்றோர்  அந்த கட்சியினர் தேசிய கொடியுடன் நேற்று தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு வந்தனர். ஆனால் மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி கொடுத்து சிலையிடம் மனு கொடுப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மாலை அணிவித்து விட்டு வெளியே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து புலவஞ்சி போஸ் உட்பட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.