வித்தியாசமான காதலும், அதன் அதிரடி முடிவும் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவருக்கு, ‘ராங் நம்பர்’ மூலம் 35 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மலர, இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர்.

மேலும் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் தீவிரமாக காதலித்து வந்த இவர்கள், நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது ரகசிய காதல் விவகாரம் மூதாட்டியின் கணவருக்கு தெரியவந்தது. தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர், கையும் களவுமாக இருவரையும் பிடித்துள்ளார்.

“>

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம்” என அந்த மூதாட்டி உறுதியாகத் தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வினோத காதல் கதை பேசுபொருளாக மாறியுள்ளது.