மருத்துவ ரீதியாக எந்தவித ஆதாரமும் இல்லாத ‘அதிசய’ வீட்டு வைத்தியங்களை கண்மூடித்தனமாக நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. ஒரு நபர் தனது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலை நம்பி, தனது அந்தரங்க உறுப்பிற்குள் உயிருள்ள அட்டையை நுழைத்துள்ளார்.
மேலும் அட்டை ரத்தத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், அது உள்ளே சென்றவுடன் கடுமையான ரத்தப்போக்கு மற்றும் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தியது. அந்த நபரின் நிலைமை மோசமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்த உயிருள்ள அட்டையை வெளியே எடுத்தனர். இதுபோன்ற ஆபத்தான சோதனைகள் உயிருக்கே உலைய வைக்கும் என்றும், நிரந்தரமான உடல் ஊனத்தையோ அல்லது கடுமையான தொற்று நோய்களையோ ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இணையத்தில் பகிரப்படும் போலி மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றுவதை விடுத்து, உடல்நலம் சார்ந்த எந்தவொரு பிரச்சனைக்கும் தகுதிவாய்ந்த மருத்துவர்களை அணுகுவதே பாதுகாப்பானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
