அசாமில் நீதி பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அங்குள்ள ஸ்ரீ ஸ்ரீ சங்கர் தேவ மத வழிபாட்டு தளத்திற்கு செல்ல முயற்சித்தார். ஆனால் ராகுல் காந்தி கோவிலில் வழிபாடு செய்வதற்கு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதனால் கோவிலுக்கு வெளியே சாலையில் அமர்ந்த ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். இது குறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில் அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடப்பதால் மதியம் மூன்று மணிக்கு மேல் ராகுல் காந்தி அவர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி அவர்கள், எந்த நேரத்தில் கோவிலில் வழிபட வேண்டும் என்று தற்போது மோடி முடிவெடுக்கிறாரோ? என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு தாங்கள் எந்த பிரச்சினையும் செய்ய வரவில்லை கடவுளை வழிபடுவதற்காக மட்டுமே வந்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.