இந்தியாவில் வங்கிகளை விட போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபத்தை தருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் போஸ்ட் ஆபீஸ் இன் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். போஸ்ட் ஆபீஸ் MIS திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக தனி கணக்கில் ஒன்பது லட்சம் வரையும் கூட்டு கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரையும் டெபாசிட் செய்யலாம். ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்திற்குப் பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கான வட்டியை மாத வருமானமாக நீங்கள் பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒன்பது லட்சம் ரூபாய் நீங்கள் டெபாசிட் செய்து வந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மாதம் தோறும் 5500 ரூபாய் வருமானமாகவும், கூட்டு கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் தோறும் 9250 ரூபாய் வருமானமாகவும் பெற முடியும். ஆனால் முதிர்வு காண முடிவதற்கு முன்பு டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெற விரும்பினால் வைப்பு தொகையிலிருந்து ஒரு சதவீதம் கழித்த பிறகு மீதமுள்ள தொகை உங்களுக்கு வழங்கப்படும்.