இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் 10 வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது ஆதார் அட்டையை புதுப்பித்தல் மற்றும் ஆதார் பதிவுக்கான புதிய படிவத்தை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது 18 வயது முதல் அதற்கு மேற்பட்ட நபர்கள் படிவம் 1 மூலமாக ஆதாரை பரிந்துரை செய்யலாம். அடுத்து இந்தியாவிற்கு வெளியே முகவரி சான்றிதழ்களை பெற்ற குடியுரிமை பெறாதவர்கள் படிவம் இரண்டுக்கு பரிந்துரை செய்யலாம்.

அடுத்து ஐந்து முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் படிவம் மூன்றுக்கு பரிந்துரை செய்யலாம். இந்தியாவிற்கு வெளியே முகவரி உள்ள ஐந்து முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் படிவம் 4க்கும், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் படிவம் ஐந்துக்கும், நாட்டிற்கு வெளியே முகவரி வைத்திருக்கும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் படிவம் ஆறுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட குடியுரிமை பெற்ற நபர்கள் படிவம் ஏழுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் படிவம் எட்டுக்கும் பரிந்துரை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.