தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரவை, மைதா, கோதுமை மற்றும் அரிசி மாவுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாக கூறி அவை திருப்பி அனுப்பப்பட்டன. அந்த பொருட்களை கோவை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ததில் மத்திய அரசால் 2020 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட க்ளோரி பைரிபோஸ் என்ற ரசாயனம் கலந்திருந்தது தெரியவந்தது.

மாவு பொருட்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் குளோரி பைரிபோஸ் 0.01 என்ற அளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 0.604 வரை கலக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ரசாயனம் கலந்த உணவை சாப்பிடுபவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என கூறப்படுகிறது.