இன்றைய காலக்கட்டத்தில் பயணத்தின்போது மொபைல் (அ) லேப்டாப் பயன்படுத்துவது பயணிகள் மத்தியில் மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. இதுபோன்ற சூழலில் ரயிலில் உள்ள அனைத்து இருக்கைகளுக்கும் மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்படுள்ளது. எனினும் ரயிலில் எப்போது வேண்டுமானாலும் உங்களது போனை சார்ஜ் செய்ய முடியாது.

ரயில்வே விதியின் அடிப்படையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் ரயிலில் பயணிகள் தங்களது ஸ்மார்ட் போன்(அ)லேப்டாப்களை சார்ஜ் செய்வதற்கு தடைவிதித்திருக்கிறது. ரயிலில் எவ்வித விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வேயானது இப்படி செய்கிறது.

சென்ற 2014-ம் வருடம் ரயில்களில் ஏற்படும் தீவிபத்துகளை கட்டுப்படுத்த ரயில்வே வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அதன்பிறகு 2021ல் ரயில்வே அனைத்து மண்டலங்களுக்கும் இதே போன்ற உத்தரவை பிறப்பித்தது. எனினும் போதிய தகவல் இல்லாததால் பெரும்பாலான பயணிகளுக்கு இவ்விதி பற்றி தெரியவில்லை.