ரயில்வே விதியின் அடிப்படையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்ணிடம் டிக்கெட் இல்லையெனில், ரயிலிலிருந்து இறக்க முடியாது. பல சமயங்களில் பெண் பயணி ரயிலில் அவசர அவசரமாக பயணிக்க வேண்டிய அவலநிலையும், இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிப்பதும் நடக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில் அப்பெண்ணை ரயிலிலிருந்து இறக்க முடியாது.

இதுபோன்ற சூழ்நிலையில் ரயில்வேயானது பெண்களுக்கு ஆதரவான பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இந்திய ரயில்வேயின் விதிகளின் படி, ஒரு பெண் (அ) குழந்தை தனியாக டிக்கெட் இன்றி இரவில் ரயிலில் பயணம் மேற்கொண்டால் டிக்கெட் பரிசோதகர் அவரை ரயிலிலிருந்து இறக்க முடியாது. எனினும் அவர் கீழே இறக்கிவிட்டார் எனில் சம்பந்தப்பட்ட பெண் ரயில்வே ஆணையத்திடம் பரிசோதகருக்கு எதிராக புகாரளிக்கலாம்.