பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு மிகவும் அவசியம் ஆகும். பான்கார்டு என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்பு எண் ஆகும். இதன் உதவியோடு மக்கள் ஈஸியாக பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை செய்யலாம். பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்குரிய காலக்கெடு 2023, ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இப்போதைய விதிகளின் படி உங்களது நிரந்தர கணக்கு எண்ணையும்(PAN) ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் படி, இரண்டும் இணைக்கப்படவில்லை எனில் அவர்களின் பான் கார்டுகள் செயலிழந்துவிடும். இதனால் நிதிப்பரிவர்த்தனைகளை செய்ய இயலாது. அபராதம் செலுத்தாமல் இரண்டையும் இணைக்கும் காலக்கெடு முடிந்துவிட்ட சூழலில், இப்போது மக்கள் ரூ.1,000 அபராதம் செலுத்தி பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைக்க முடியும்.