மத்தியப்பிரதேசம் மொரினா மாவட்டத்திலுள்ள லேபா கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் நிலத் தகராறின் காரணமாக 3 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நில உரிமை தொடர்பாக ரஞ்சித் தோமர், ராதே தோமர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இடையில் நீண்ட காலமாக தகராறு ஏற்பட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் வருடம் ரஞ்சித் தோமரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ராதே தோமரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேரைக் கொன்றனர். அதன்பின் கிராமத்தை விட்டு வெளியேறினார்.

அண்மையில் ரஞ்சித் தோமரின் குடும்பத்தினர் கிராமத்திற்கு திரும்பி வந்தனர். அதனை தொடர்ந்து அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் ராதே தோமரின் குடும்பத்தினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர். தற்போது குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.