பீகார் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் எனும் கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகளானது நடந்துகொண்டிருந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசித்து வரும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் தான் மணமகன். திருமண நாளன்று மணமகன்- மணப்பெண்  இருவரும் மேடைக்கு வந்து மாலை அணிவித்துக் கொண்டனர்.

அப்போது மணப் பெண்ணின் தங்கை புதுல் குமாரி ராஜேஷ் குமாரை எனக்கு தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் என கூறி ரகளையில் ஈடுபட்டார். இவ்விவகாரத்தால் திருமண வீட்டில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உள்ளூர் தலைவர் மற்றும் மணமகன் ராஜேஷிடம் பேசினர்.

அக்காவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்னதாகவே தனக்கு தங்கை புதுலுடன் காதல் என இரு குடும்பத்தாரிடம் கூறினார் ராஜேஷ். அதனை தொடர்ந்து மணப்பெண்ணும் தன் தங்கை புதுல் குமாரியை மணமகன் ராஜேஷ்குமார் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்து மணப் பெண்ணின் தங்கையை மண முடித்து ஊர் திரும்பினார் மணமகன் ராஜேஷ்.