இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் போக்குவரத்தை அதிக அளவு விரும்புகின்றனர். பெரும்பாலான சேவைகள் தற்போது டிஜிட்டல் முறையில் கிடைப்பதால் ரயில் பயணிகளுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் ரயில்வே வாரியம் பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக அனைத்து விதமான ரயில்வே சேவைகளுக்கும் ஒரே செயலியின் மூலம் தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி மத்திய அரசு தயாரித்து வரும் இந்த சூப்பர் செயலி மூலம் பயணம் முன்பதிவு, டிக்கெட் நிலவரம், ரயிலின் நேரலை இருப்பிடம் மற்றும் உணவு ஆர்டர் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். சுமார் 90 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட வரும் இந்த செயலியை சி ஆர் ஐ எஸ் ரயில்வேயில் ஐடி சிஸ்டம் யூனிட் தயாரித்து வருகின்றது. கூடிய விரைவில் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக இந்த செயலை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.