பராமரிப்பு காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான அதிவிரைவு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரு இடையிலான ரயில்கள் செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பெங்களூரில் ரயில் நிலையத்தில் நிற்காது என கூறப்பட்டுள்ளது. இதே நாட்களில் கன்னியாகுமரி- பெங்களூரு, தூத்துக்குடி- மைசூரு, சென்னை சென்ட்ரல்- மைசூரு அதிவிரைவு ரயில்களும் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.