திமுக மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சினிமா பாணியில் புள்ளிவிவரங்களை அடுக்கி எதிர்க்கட்சிகளை அதிர வைத்துள்ளார். மறைந்த நடிகர் விஜயகாந்த் ‘ரமணா’ படத்தில் ஊழல்வாதிகளைப் புள்ளிவிவரங்களுடன் அலறவிடுவது போல, தமிழக அரசின் சாதனைகளை வரிசையாகப் பட்டியலிட்டார்.

“மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டிவிட்டது, இந்தியாவின் டாப் 100 கல்லூரிகளில் 33 கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளன, கடந்த ஆட்சியை விட 12 சதவீத வாக்கு வித்தியாசத்தில் நாம் முன்னிலையில் இருக்கிறோம்” எனத் தரவுகளை அடுக்கிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் மெகா வெற்றியைப் பதிவு செய்வோம் என கர்ஜித்தார்.

குறிப்பாக, மத்திய பாஜக அரசின் நெருக்கடிகளை முறியடித்து ‘ஸ்டாலின் 2.0’ ஆட்சியைத் தொடருவோம் என்றும், பிளவு ஏற்படுத்த நினைக்கும் சக்திகளுக்குத் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வலிமையே பதிலடி கொடுக்கும் என்றும் அவர் சூளுரைத்தார்.

புள்ளிவிவரங்களால் ஸ்டாலின் கொடுத்த இந்த ‘ரமணா’ ஸ்டைல் ட்ரீட், சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.