தமிழக அரசியலில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற விவாதம் அனல் பறந்து வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் செம காட்டமாகப் பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலில் இதுகுறித்துப் பேசிய அவர், “ஏன் ஆட்சியில் பங்கு தரவில்லை என்பதை நீங்கள் திமுகவிடமும், அதிமுகவிடமும் தான் கேட்க வேண்டும்; எங்களிடம் கேட்கக் கூடாது” என்று நறுக்கென்று பதிலளித்தார்.
மேலும், அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று பாஜக ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், யாரையும் கஷ்டப்படுத்தி அல்லது வற்புறுத்தி என்டிஏ (NDA) கூட்டணியில் இணைக்கவில்லை என்றும், விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே கூட்டணியில் இருக்கிறார்கள் என்றும் அதிரடியாகத் தெரிவித்தார்.
திமுக-காங்கிரஸ் இடையே ‘ஷேரிங்’ பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், நயினார் நாகேந்திரன் ஓப்பனாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
