​நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173-வது திரைப்படத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்குவார் என்று அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் உற்சாகமடைந்த ரஜினி ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுகளுக்காகக் காத்திருந்த நிலையில், சுந்தர். சி ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தவிர்க்க முடியாத சில சொந்தக் காரணங்களால், தான் ரஜினியின் 173-வது படத்தில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இயக்குநர் மாற்றப்பட்டு இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.