லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்டில் உருவாகி வரும் படம் “லால் சலாம்”. விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கக்கூடிய இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் சில நாட்கள் நடைபெற்றது.

இப்படத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நிரோஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நிரோஷா 80-களில் முன்னணி நட்சத்திராமாக இருந்தவர் ஆவார்.