தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் இசைக்குழுவை சேர்ந்தவர் கிடாரிஸ்ட் சந்திர சேகர். இவர் இளைய நிலா பொழிகிறதே உள்பட பெரும்பாலான பாடல்களுக்கு கிடார் இசையமைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

இந்த நிலையில் கிடாரிஸ்ட் சந்திரசேகர் மறைந்து விட்டதாக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், எழுத்தாளர், பாடலாசிரியர் சுகா போன்றோர் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இளையராஜா இசைக் குழுவின் நீண்டகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த சந்திரசேகரின் மறைவு இசையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.