உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் சமீபத்தில் ஒரு கூட்டு திருமண விழாவில் ரஸ்குல்லாக்களின் பற்றாக்குறை மற்றும் உணவு ஏற்பாடுகளில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு பெண் சமூக நல அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது  விழாவில் 551க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு ₹15,000 உணவு மற்றும் ₹24,500 பரிசுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், உணவு எட்டியிருந்தோர் எண்ணிக்கை 5,000 க்கும் குறைவாக இருந்தது. பொதுமக்கள் ஒரு தட்டில் நான்கு ரஸ்குல்லாக்களை எடுத்ததால் இனிப்புகள் விரைவில் முடிந்தது. பிறகு காய்கறி, பருப்பு மற்றும் ரொட்டி கவுண்டர்களிலும் குழப்பம் ஏற்பட்டது. சமையல் ஊழியர்கள் வேலையை நிறுத்தியதால் பலர் காலியாக நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் உருவானது.

 

இந்த சம்பவத்தை விசாரிக்க நகர மாவட்ட நிர்வாகி டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, உடனடியாக மாவட்ட சமூக நல அதிகாரி ஷில்பி சிங்கை பதவிநீக்கம் செய்து, லக்னோவில் மாற்றியமைத்தனர். அவருக்குப் பதிலாக சிவம் சாகர் புதிய மாவட்ட சமூக நல அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது பற்றி நகராட்சி நிர்வாகம் கூறியதாவது, இந்த விசாரணை முழுமையாக நடக்கிறது; குற்றவாளிகள் தப்ப முடியாது மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற மேலாண்மை பிழைகள் மீண்டும் ஏற்படாமல் பார்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.