சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகும் ஒரு வீடியோ தற்போது மக்களை சிரிக்க வைத்துள்ளது. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய இளைஞர், போக்குவரத்து போலீசாரைக் கண்டு பயந்து அபராதத்தை தவிர்க்க யூ-டர்ன் எடுத்து தப்பிக்க முயன்றார். முன்னால் சந்திப்பில் பைக் நிறுத்தச் சொன்ன போலீஸ்காரரை விட்டு விலகி தப்பித்துவிட்டதாக நினைத்த அந்த இளைஞர், ஒரு இடத்தில் நின்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் அதுவே அவரின் மிகப்பெரிய தவறாக மாறியது. திடீரென்று, அருகில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்த போலீஸ்காரர், சினிமா ஹீரோவைப் போல ஆட்டோவிலிருந்து குதித்து இறங்கி, அந்த இளைஞரைப் பிடித்தார். உடனடியாக அவருக்கு அபராத ரசீது (சலான்) வழங்கப்பட்டது. தப்பித்துவிட்டதாக நினைத்த நிலையில் திடீரென்று போலீஸாரிடம் சிக்கியதால், அந்த இளைஞர் பரிதாபமான நிலையில் சிக்கிக்கொண்டார்.
Police uncle be like : Challan toh kaat ke rahunga 🗿 pic.twitter.com/RZVa85riXI
— Vishal (@VishalMalvi_) September 4, 2025
“>
இந்த வீடியோ மக்களிடையே நகைச்சுவையான கருத்துக்களை கிளப்பியுள்ளது. ஒருவர், “அப்படிப்பட்ட போலீஸ்கார் இருந்தால் யாரும் விதிகளை மீற மாட்டார்கள்” என்று எழுதியுள்ளார். இவ்வாறு, சிரிப்பு கலந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
