சமூக வலைதளங்களில் தற்போது மஹிந்திரா தார் சம்பந்தப்பட்ட ஒரு வினோதமான வீடியோ வைரலாகி வருகிறது. வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தத் தார் காரின் ஜன்னல் கதவு லேசாகத் திறந்திருப்பதை கவனித்த தெரு நாய் ஒன்று, மிகவும் லாவகமாக காருக்குள் குதித்து உள்ளே நுழைகிறது. வழக்கமாக நாய்கள் கார்களுக்கு அடியில் தங்குவதை பார்த்திருப்போம், ஆனால் ஒரு நாய் இவ்வளவு துணிச்சலாக காருக்குள்ளேயே தஞ்சம் புகுந்த விதம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவின் இறுதிப் பகுதிதான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காருக்குள் சென்ற நாய் மீண்டும் வெளியே வர முடியாமல் தவிக்குமோ அல்லது காரின் உட்புறத்தை சேதப்படுத்துமோ என்று பார்த்தால், அது மிகவும் அமைதியாக காரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறது.
View this post on Instagram
“>
இந்நிலையில் உரிமையாளர் காரை எடுக்க வந்தபோது உள்ளே நாய் இருப்பதைப் பார்த்து ஒரு நிமிடம் உறைந்து போனார். “யார் வீட்டு கார், யார் வீட்டு நாய்?” என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை கிண்டலாகவும், ஆச்சரியமாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
