சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உருவக் கேலிக்கு ஆளான ஒரு சிறுமிக்கு எவ்வாறு தன்னம்பிக்கை ஊட்டப்பட்டது என்பதைக் காட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தான் பருமனாக இருப்பதால் சக மாணவர்கள் தன்னை கேலி செய்வதாக அந்தச் சிறுமி தழுதழுத்த குரலில் கண்ணீருடன் கூறினார்.

மேலும் இதைக் கண்ட ‘மேவன் மிஸ் பிளஸ் சைஸ் இந்தியா’ வெற்றியாளரான அஞ்சலி பி. குப்தா, உடனடியாக அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து அன்புடன் கட்டிணைத்துக் கொண்டார். அவரது கனிவான வார்த்தைகள் மற்றும் அரவணைப்பு அந்தச் சிறுமியின் முகத்தில் மெல்ல புன்னகையை வரவழைத்தது.

 

View this post on Instagram

 

A post shared by Anjali B. Gupta (@anjibernbjj)

“>

இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் உச்சகட்டமாக, அஞ்சலி குப்தா அந்தச் சிறுமிக்கு ‘ஜூனியர் பிரின்சஸ்’ என்ற பட்டத்தை வழங்கி மகுடம் சூட்டினார். உருவ அமைப்பைக் கடந்து ஒவ்வொருவரின் உள்ளமும் அழகானது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த இந்தச் செயல், அங்கிருந்தவர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சிறுமியின் காயப்பட்ட மனதை அஞ்சலி ஆற்றிய விதம் பாராட்டுக்குரியது என்றும், சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு உடல் நேர்மறை எண்ணங்களை விதைப்பது மிகவும் அவசியம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.