வரவிருக்கும் தேர்தலை வெறும் அரசியல் போட்டியாகப் பார்க்காமல், ஒரு குடும்பப் பந்தமாகப் பார்க்குமாறு நெல்லை தேர்தல் பிரசாரத்தில் உருக்கமாகப் பேசினார் விஜய். “இத்தனை வருஷம் யார் யாருக்கோ ஓட்டு போட்டீங்க, ஆனா இந்த முறை உங்க வீட்டுப் பிள்ளைக்கு ஓட்டுப் போடுங்க. வேட்பாளர் ஜெயிச்சா அது நாம ஜெயிச்ச மாதிரி!” எனத் தனது கட்சி வேட்பாளர்களை மக்களின் பிரதிநிதிகளாக முன்னிறுத்திப் பேசினார்.
இது அரசியலைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருக்கும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்றும், இந்தியாவே வியக்கும் வகையில் இந்தத் தேர்தல் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் என்றும் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த ‘எமோஷனல்’ பேச்சு சாதாரண வாக்காளர்களையும் தவெக பக்கம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
