ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் 21-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. இந்தச் சூழலில், இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 84 மாலுமிகள் உயிரிழந்தனர்; 32 பேர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி ஈரானின் மற்றொரு கப்பல் தற்போது இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கை தனது நடுநிலையான நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது போர் விமானங்களை மட்டாலா விமான நிலையத்தில் நிறுத்த அனுமதி கோரியதையும், ஈரான் தனது போர்க்கப்பல்களை நிறுத்த அனுமதி கேட்டதையும் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக மறுத்துள்ளார்.

ஒரு நாட்டிற்கு அனுமதி அளித்தால் மற்றொன்றுக்கும் அளிக்க வேண்டியிருக்கும் என்பதால், நாட்டின் பாதுகாப்பைக் கருதி இரு தரப்பு கோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.