ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் 21-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சுமார் 3,200 வணிகக் கப்பல்கள் நடுக்கடலில் சிக்கியுள்ளன. போர் காரணமாக இந்தப் பகுதி வழியாகச் செல்ல முடியாமல் தவிக்கும் இந்தக் கப்பல்களில் உள்ள மாலுமிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அருகில் உள்ள துறைமுக அதிகாரிகளும் இந்தக் கப்பல்களை அனுமதிக்க மறுப்பதால், மாலுமிகள் அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சூயஸ்கால்வாயில் 400 கப்பல்கள் முடங்கியதே உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது 3,200-க்கும் மேற்பட்ட ரசாயன மற்றும் எண்ணெய் கப்பல்கள் போர்க்களத்தின் நடுவே சிக்கியிருப்பது உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் என அஞ்சப்படுகிறது.
ஒருவேளை மாலுமிகள் கப்பல்களைக் கைவிட்டு வெளியேறினால், கடலில் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
