பெட்ரோல் விலை ஏற்கனவே மிகவும் உயர்ந்திருக்கும் இந்த சூழலில், ஒரு பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில், ஒரு நபர் சாம்பார் வாளியில் 110 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்க முயற்சிக்கிறார்.
ஆனால், பெட்ரோல் நிரப்பும் மிஷினில் தொகை ஓட ஆரம்பித்தவுடன், பைப்பிலிருந்து பெட்ரோல் வரவில்லை. மிஷினில் 30 ரூபாய் கணக்கு காட்டிய பிறகுதான் பெட்ரோல் வரத் தொடங்குகிறது. இந்த ஏமாற்று முறை பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும், காணொளியில், முதலில் பெட்ரோல் வேகமாக வந்தாலும், மிஷினில் 90 ரூபாயைத் தாண்டியவுடன் பைப்பில் வரும் பெட்ரோலின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால், வாகன ஓட்டி செலுத்திய முழுத் தொகைக்கும் பெட்ரோல் கிடைக்கவில்லை. இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
