சமூக வலைதளங்களில் பரவி வரும் 12 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில், ஒரு சிங்கக் குட்டி நீர்நடுவில் சிக்கிக் கொண்டு தவித்த போது, அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. காரணம், அதனை சுற்றி முதலைகள் மெதுவாக நெருங்குகின்றன.

இதனை கரையிலிருந்து பார்த்து கொண்டிருந்த பெரிய சிங்கம் கூட தன் குட்டியை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வானத்தின் ராஜா எனப்படும் கழுகு ஒன்று பறந்து வந்து, அதனை தனது நகங்களால் தூக்கிச் செல்லும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

“>

 

இந்த அதிசய காட்சி கொண்ட வீடியோவை சமூக ஊடக தளமான X – இல் @Digital_khan01 என்ற பயனர் பகிர்ந்துள்ளார். அதில், “நெருக்கடி ஆழமான தருணங்களில், மன்னர்களுக்கும் ஆதரவு தேவை. வானத்தின் ராஜா, தரையின் மன்னனை காப்பாற்றியது இதற்குச் சான்று” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவை 3.42 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து, மனதை தொடும் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “சந்தர்ப்பத்தில் ஆதரவு அளிப்பவர் மட்டுமே உண்மையான சக்தி,” “கொல்லவந்த காலங்களில் காப்பாற்றுபவரே இறைவன்” எனவும், “முதலைகள் ஆபத்தானவைதான்… ஆனால் AI உருவாக்கும் உணர்வுகள் இன்னும் ஆபத்தானவை” எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இது உண்மையான காணொளியா அல்லது AI உருவாக்கியதா என்பது தெரியாத நிலையிலும், இந்த வீடியோ காண்பவர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.