90-களில் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்த சுவாதி, நடிகர் விஜய்யுடன் தான் முதன்முதலில் சந்தித்த சுவாரசியமான அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ‘தேவா’ திரைப்படத்திற்காக இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது வீட்டிலேயே நாயகன் மற்றும் நாயகிக்கு போட்டோஷூட் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் அந்தச் சமயத்தில் ஸ்டுடியோவில் கேமராமேன் சொல்லும் போஸ்களை சுவாதி கொடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு இளைஞர் பின்னால் இருந்து வந்து அவர் தோளில் கை வைத்துள்ளார். முன்அறிமுகம் இல்லாத நபர் ஒருவரின் இந்தச் செயலால் சுவாதி ஒரு நிமிடம் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்தவர்கள், சுவாதியின் தோளில் கை வைத்தவர் தான் அந்தப் படத்தின் கதாநாயகன் விஜய் என்று அறிமுகம் செய்துள்ளனர். அப்போது ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களை மட்டுமே அறிந்திருந்த சுவாதிக்கு, விஜய் யாரென்று தெரியவில்லை.

அதன் பிறகுதான் அவர் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்பதே தனக்குத் தெரிந்தது என்று அவர் அந்தப் பேட்டியில் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பகிர்ந்துள்ள இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.