தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வருகை பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அவரை மக்கள் ஒரு முழுமையான தலைவனாக அங்கீகரித்துவிட்டதாக இயக்குநர் பேரரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ஒரு நடிகர் அதிக சம்பளம் வாங்குவதாலோ அல்லது லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருப்பதாலோ மட்டும் ஒரு சிறந்த தலைவராகிவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தலைவராக உருவெடுக்க மக்களிடம் நற்பெயரும், சேவை செய்யக்கூடிய தூய்மையான மனமும் மிக அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
விஜய்யின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அவர் காட்டும் தீவிரம் ஆகியவை தமிழக மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவரை மக்கள் தற்போது ஒரு அரசியல் தலைவனாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பேரரசு புகழ்ந்துள்ளார்.
விஜய்யின் அரசியல் பயணம் குறித்த இத்தகைய ஆதரவு குரல்கள், தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
