வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அந்நாட்டின் சாந்த்பூர் மாவட்டத்தில் 25 வயதுடைய மாற்றுத்திறனாளி இந்துப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை ரகீப், சோஹைல் மற்றும் ரசல் ஆகிய மூன்று பேர் கொண்ட கும்பல் பலவந்தமாகக் கடத்திச் சென்றது. ஆள் நடமாட்டமற்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண், கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு சுயநினைவின்றிப் பாதையில் வீசப்பட்டார்.

இந்தக் கொடூரச் செயலால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாதது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்து உள்ளூர் மக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் வங்கதேசத்தில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள சூழலிலும், இந்துக்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் குறையாமல் தொடர்வது உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.