அமெரிக்காவில் வசிக்கும் பால் இன் யூஎஸ்ஏ’ என்ற பிரபல சீன சமூக வலைதளத்தில், தனது மனைவியின் 23 மணி நேரப் பிரசவ வலியைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்தின்போது அவரது மனைவி அனுபவித்த வேதனையை மிக நெருக்கமாகப் படம்பிடித்து, அதைத் தனது வருமானத்திற்காகவும் பார்வைகளுக்காகவும் பயன்படுத்தியுள்ளார்.

இதனால் இணையவாசிகள் கடுமையாகச் சாடி வருகின்றனர். ஒரு பெண்ணின் தனிப்பட்ட மற்றும் வலி நிறைந்த தருணத்தை உலகிற்குப் பொதுவாக்கியது முறையற்றது எனப் பலரும் பால் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் சீன சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், நவீன காலத்தில் ‘கண்டெண்ட்’  உருவாக்குவதற்காகத் தார்மீக விழுமியங்களைச் சீரழிப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் மனைவியின் உடல்நிலை மற்றும் தனியுரிமைக்கு மதிப்பளிக்காமல், பணத்திற்காக இவ்வளவு தூரம் செல்வதா எனப் பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் சிலர் அவருக்கு ஆதரவாகப் பேசினாலும், பிரசவக் காட்சிகளைப் பகிரங்கப்படுத்தியது சமூக வலைதளங்களில் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே பெரும்பாலானோர் கருதுகின்றனர்.