சமூவலைதளங்களில் விதவிதமான கண்டுபிடிப்புகளைப் பார்த்திருப்போம், ஆனால் இந்த நபர் ஒரு படி மேலே போய், பழைய இரும்புத் தகடுகளைக் கொண்டு ஒரு மூன்று சக்கர வாகனத்தையே ‘ஃபைட்டர் ஜெட்’ போல மாற்றி அசத்தியுள்ளார். கூர்மையான முன்பகுதி, இறக்கைகள் என அச்சு அசல் போர் விமானம் போலவே வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் சாலையில் செல்வதைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இதைப் பார்த்தாலே பாகிஸ்தான் பயந்துடும் போலயே!” என்றும், “தம்பி அப்படியே வண்டியத் திருப்புங்க, முன்னாடி ஆர்.டி.ஓ (RTO) நிக்கிறாரு, செமயா ஃபைன் போட்டுடப் போறாரு” என்றும் ஜாலியாகக் கலாய்த்து வருகின்றனர். இந்த நபரின் அபாரமான கற்பனைத் திறனும் கைவேலையும் இப்போது இணையத்தில் செம வைரல்!