தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்திச் சில அரசியல் கட்சிகள் தங்களுக்குத் தேவையான தொகுதிகளைப் பெறப் பேரம் பேசி வருவதாகத் தவெக ஐடி விங் அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

சில கட்சிகள் தங்களது கூட்டணி பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காகத் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், இதனைத் தவெக வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மட்டுமின்றிப் புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்தே களம் காணப் போவதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எனவே, கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வராத எந்தவொரு செய்தியையும் தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று தவெக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. விஜய்யின் இந்த அதிரடித் தகவல் அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.