மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. உலகின் மிகச்சிறந்த ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளாகக் கருதப்படும் அமெரிக்காவின் ‘தாட்’ மற்றும் இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ஆகியவற்றை ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் நிலைகுலையச் செய்துள்ளன.

குறிப்பாக, 9,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்காவின் ராடார் தளம் சேதமடைந்ததும், அதிநவீன எஃப்-35 போர் விமானமே தாக்குதலுக்கு உள்ளானதாகக் கசிந்துள்ள தகவல்களும் அமெரிக்கப் படைகளுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றன.

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களைக் கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வல்லரசுகளின் ஆயுதங்களைத் தகர்க்க முடியும்என்பதை ஈரான் நிரூபித்து வருவது ராணுவ நிபுணர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பி-2 ரக குண்டுவீச்சு விமானங்கள் தற்போது களமிறக்கப்பட்டாலும், ஈரானின் இந்தத் தொழில்நுட்ப ஆதிக்கம் போர் வியூகங்களையே மாற்றி அமைத்துள்ளது.

வியட்நாம் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் வீழ்த்த முடியாத பிம்பத்தை ஒரு சிறிய நாடு சிதைத்துக் காட்டியிருப்பதாக சர்வதேச அளவில் இந்தப் போர் உற்றுநோக்கப்படுகிறது.