விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி பள்ளி நிர்வாகம் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். முன்னதாக சிறுமியின் உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் அஞ்சலி செலுத்தி முதல்வர் அறிவித்த 3 லட்ச ரூபாய் பணத்திற்கான காசோலையை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.