​”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய தத்துவத்தைப் போற்றும் தமிழ் மண்ணில், திருத்தணியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரஜ் என்ற வடமாநிலத் தொழிலாளி, கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சமூக வலைதள வீடியோக்களுக்காக (Reels) அந்த கும்பல் சூரஜின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இதை அவர் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை நிலைகுலையச் செய்யும் வகையில் தாக்கியுள்ளது. இந்த கொடூரமான காணொளி தற்போது வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

வீடியோவை காண

​இந்தச் சம்பவம் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பதும், வன்முறையைப் பெருமையாகக் கருதும் மனநிலையும் இத்தகைய கொடூரங்களுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலை இந்த ‘திராவிட மாடல்’ அரசு அனுமதிப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.