
சேர் போட்டு ஸ்டீவன் ஸ்மித் வெப்பமான மதியத்தில் குளிர்ச்சியாக இருக்கும் போது, விராட் கோலி மார்னஸ் லாபுஷாக்னேவுடன் வேடிக்கையாக குறும்பு செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 3வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கி அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். டேவிட் வார்னர் (34 பந்துகளில் 56 ரன்கள் : 4 சிக்ஸர், 6 பவுண்டரி) அரைசதம் கடந்த நிலையில் பிரசித் கிருஷ்ணாவின் 9வது ஓவரில் அவுட் ஆனார்.

இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் – மிட்செல் மார்ஷ் ஜோடி சிறப்பாக ஆடியது. மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடினார். எனவே ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. பின் மார்ஷ் 84 பந்துகளில் 13 பவுண்டரி, 3சிக்ஸர் உட்பட 96 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவின் 28வது ஓவரில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார். அதன்பின் சிறப்பாக ஆடி வந்த ஸ்மித் 61 பந்துகளில் (8 பவுண்டரி, 1 சிக்ஸர்) 74 ரன்கள் அவுட் ஆனார். அதன்பின் வந்த அலெக்ஸ் கேரி 11, கிளன் மேக்ஸ்வெல் 5, கேமரூன் கிரீன் 9 ரன்கள் என அடுத்து வந்த பேட்டர்கள் அடுத்தடுத்து வெளியேறினாலும், மிடில் ஆர்டரில் லாபுசாக்னே சிறப்பாக ஆடி 58 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 72 ரன்கள் சேர்த்து 49 வது ஓவரில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. பேட் கம்மின்ஸ் 19 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
விராட் கோலியின் குறும்பு :
போட்டி மதியம் 1:30 மணிக்கு தொடங்கியதால், வெயிலின் தாக்கத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் மிகவும் சிரமப்பட்டனர். ஆனாலும் ரன் மழை பொழிந்தனர். அடிக்கடி பெவிலியனிலிருந்து வீரர்கள் வாட்டர் பாட்டில்களை கொண்டு வந்து வீரர்களுக்கு கொடுத்து வந்து வந்தனர். ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் போது 28 ஓவர் முடிந்த நிலையில், களத்தில் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே இருவரும் இருந்தனர்.. அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு சேரையும் உள்ளே கொண்டு வந்தனர். ஸ்மித் அதில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.. அவருக்கு தண்ணீர் மற்றும் அவரது தலையில் ஐஸ் கட்டிஒத்தனம் கொடுக்கப்பட்டது.
அப்போது விராட் கோலி லாபுசாக்னேவிடம் குறும்புத்தனம் செய்து பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதேபோல மைதானத்தில் ஸ்மித் சேர் போட்டு உட்கார்ந்த சம்பவமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விராட் கோலி இப்படி செய்வது இது முதல் முறை அல்ல. இதே போல களத்தில் எப்போதும் இது போன்ற வேடிக்கையான பல விஷயங்களை அவ்வப்போது செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டியின் போது தனது ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் களத்திற்கு வரும்போது அவரை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார் கோலி.
Virat Kohli – what a character!
He's having fun with Marnus Labuschagne while Steven Smith is chilling in the hot afternoon. pic.twitter.com/CVK8jmTcr3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 27, 2023