ஐபிஎல் மைதானங்களில் எப்போதும் ஆக்ரோஷமாக காணப்படும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தற்போது தனது நெகிழ்ச்சியான செயலால் இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார்.

பஞ்சாப் அணி வீரர்கள் பயிற்சி முடித்துத் திரும்பியபோது, ஒரு குட்டி ரசிகர் தனது ஆட்டோகிராப் டைரியுடன் நீண்ட நேரமாக வீரர்களுக்காகக் காத்திருப்பதை பாண்டிங் கவனித்தார். உடனே, அங்கிருந்த யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோரை அழைத்து, அந்தச் சிறுவனிடம் சென்று ஆட்டோகிராப் போடுமாறு அறிவுறுத்தினார்.

“>

 

ஒரு காலத்தில் கிரிக்கெட் மைதானத்தில் எதிரணிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ” பாண்டிங், தற்போது ஓய்வுக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடம் காட்டும் இந்த அன்பும், மரியாதையும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.